headline photo

புது மாப்பிள்ளையாகிறார் பிரகாஷ்ராஜ்..!

Tuesday, May 18, 2010

புது மாப்பிள்ளையாகிறார் பிரகாஷ்ராஜ்..!


நடிகர் பிரகாஷ்ராஜ் வருகின்ற ஜூன் 24-ம் தேதி மீண்டும் மாப்பிள்ளைக் கோலத்தில் திளைக்கப் போவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று நான்கு மொழிகளிலும் படு பிஸியான நடிகராக இருந்து வரும் பிரகாஷ்ராஜ் பிரபல தமிழ் நடிகையான லலிதகுமாரியை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்..

இந்த நிலையில் பாலிவுட்டில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி வரும் போனி வர்மா என்பவருடன் காதல் வயப்பட்ட பிரகாஷ்ராஜ் அவரைத் திருமணம் செய்வதற்காக தனது மனைவி லலிதகுமாரியை சமீபத்தில்தான் டைவர்ஸ் செய்தார்.

அடுத்ததென்ன? கல்யாணம்தானே என்ற கேள்விக்கு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு தான் கன்னடத்தில் தற்போது இயக்கி வரும் அபியும் நானும் படத்தை முடித்துவிட்டுத்தான் மறுவேலை என்றார் பிரகாஷ்ராஜ்.

தற்போது அந்தப் படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வரும் சூழலில் நேற்று பெங்களூரில் பத்திரிகையாளர்களுக்காக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

இந்தக் காட்சிக்கு தன்னுடைய காதலி போனி வர்மாவுடன் வந்து பத்திரிகையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

நெருங்கி விசாரித்த பத்திரிகையாளர்களிடம் தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவது உறுதிதான் என்றிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

அநேகமாக வருகின்ற ஜூன் 24-ம் தேதியன்று பிரகாஷ்ராஜ்-போனி வர்மாவின் திருமணம் நடைபெறும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

போனி வர்மாவும் ஏற்கெனவே திருமணமானவர்தான். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரிடமிருந்து பிரிந்து வாழ்கிறாராம்..!

0 comments:

Post a Comment