headline photo

புது மாப்பிள்ளையாகிறார் பிரகாஷ்ராஜ்..!

Tuesday, May 18, 2010

புது மாப்பிள்ளையாகிறார் பிரகாஷ்ராஜ்..!


நடிகர் பிரகாஷ்ராஜ் வருகின்ற ஜூன் 24-ம் தேதி மீண்டும் மாப்பிள்ளைக் கோலத்தில் திளைக்கப் போவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று நான்கு மொழிகளிலும் படு பிஸியான நடிகராக இருந்து வரும் பிரகாஷ்ராஜ் பிரபல தமிழ் நடிகையான லலிதகுமாரியை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்..

இந்த நிலையில் பாலிவுட்டில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி வரும் போனி வர்மா என்பவருடன் காதல் வயப்பட்ட பிரகாஷ்ராஜ் அவரைத் திருமணம் செய்வதற்காக தனது மனைவி லலிதகுமாரியை சமீபத்தில்தான் டைவர்ஸ் செய்தார்.

அடுத்ததென்ன? கல்யாணம்தானே என்ற கேள்விக்கு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு தான் கன்னடத்தில் தற்போது இயக்கி வரும் அபியும் நானும் படத்தை முடித்துவிட்டுத்தான் மறுவேலை என்றார் பிரகாஷ்ராஜ்.

தற்போது அந்தப் படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வரும் சூழலில் நேற்று பெங்களூரில் பத்திரிகையாளர்களுக்காக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

இந்தக் காட்சிக்கு தன்னுடைய காதலி போனி வர்மாவுடன் வந்து பத்திரிகையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

நெருங்கி விசாரித்த பத்திரிகையாளர்களிடம் தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவது உறுதிதான் என்றிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

அநேகமாக வருகின்ற ஜூன் 24-ம் தேதியன்று பிரகாஷ்ராஜ்-போனி வர்மாவின் திருமணம் நடைபெறும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

போனி வர்மாவும் ஏற்கெனவே திருமணமானவர்தான். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரிடமிருந்து பிரிந்து வாழ்கிறாராம்..!

“அடுத்து இரண்டு படங்களை இயக்கி கருணாநிதியின் கையால் விருது பெற வேண்டும்” – பாரதிராஜாவின் ஆசை

Monday, May 17, 2010

“அடுத்து இரண்டு படங்களை இயக்கி கருணாநிதியின் கையால் விருது பெற வேண்டும்” – பாரதிராஜாவின் ஆசை


சென்னையில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தெக்கத்திப்பொண்ணு சீரியலின் வெற்றி விழாவில் இயக்குனர் பாரதிராஜா ஏற்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

என் 35 ஆண்டுகால உழைப்பில் கிடைக்காத பெயரும், புகழும் 2 ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருக்கும் இந்த தொடரில் கிடைத்திருக்கிறது.

நான் மூன்று முதல்வர்களிடம் பழகியிருக்கிறேன். நான் கலைஞரைப் பார்க்கும்போது அவரது நாற்காலியை பார்க்கமாட்டேன். அவர் முகத்தை, அனுபவத்தை, ஆற்றலை மட்டுமே பார்ப்பேன். கலைஞரிடம் முட்டி மோதிய காலகட்டத்தில் கூட, `நீ என்ன வேணும்னாலும் பண்ணு. என்னில் இருக்கும் உன்னை எடுக்க முடியாது` என்கிற மாதிரியே நடந்துகொண்டார். இப்படியொரு மனம் அவருக்கு மட்டும்தான் உண்டு.

அவர் என் பிள்ளைகள் திருமணத்தையும் நடத்திக் கொடுத்தவர். எனக்கு அப்பன் இல்லை. அப்பனாக இருந்து என் பிள்ளைகள் திருமணத்தை நடத்தி தந்து என்னை பெருமைப்படுத்தியவர்.

என் கலை வாழ்வில் ஒரு பதிவு வேண்டும் என்பதற்காகவே இந்த விழாவில் நீங்கள் வாழ்த்த வேண்டும் என்று அழைத்தேன். உங்கள் வாழ்த்து கிடைத்ததை என் பிள்ளைகளின் பிள்ளைகளும் அவர்கள் தலைமுறை வரைக்கும் பேசிக்கொண்டிருப்பார்கள்.

நான் அடுத்து ‘தென் கிழக்கு சீமையிலே’, ‘குற்றப் பரம்பரை’ என 2 படங்களை இயக்கவிருக்கிறேன். இந்த 2 படங்களும் வெளியாகி இரண்டுக்கும் உங்களிடம் விருது வாங்கவேண்டும். இதுவே என் இப்போதைய ஆசை.

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

உலகின் அழகான பெண் பெனிலோப் குரூஸ் முதலிடம். [பிரசுரித்த திகதி: 2010-05-17 07:47:52 AM GMT ] லண்டன் : உலகின் அழகான பெண்கள் வரிசையில் ஆஸ்கார் விரு

உலகின் அழகான பெண் பெனிலோப் குரூஸ் முதலிடம்.


லண்டன் : உலகின் அழகான பெண்கள் வரிசையில் ஆஸ்கார் விருது பெற்ற பெனிலோப் குரூஸ் முதலிடம் பிடித்துள்ளதாக பேஷன் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. பேஷன் துறை நிபுணரான சாலி ஆலன், கடந்த ஓராண்டாக பத்திரிகைகளில் வந்த புகைப்படங்களைத் திரட்டி, அழகான பெண்கள் பட்டியலைத் தொகுத்துள்ளார். அதில் உலகிலேயே அழகான பெண்ணாக ஹாலிவுட் நடிகை பெனிலோப் குரூஸ் முதலிடம் பெற்றுள்ளார்.

இதுபற்றி சாலி ஆலன் கூறியதாக கான்டேக்ட் மியூசிக் இணைய தளம் வெளியிட்ட விவரம்: ஊடகங்களால் அதிகம் கவனிக்கப்பட்ட அழகான பெண்களின் வரிசையை கடந்த ஒரு வருடமாக ஆராய்ந்து வந்தோம். அதில் உலகின் டாப் 10 இடத்தில் அண்மையில் ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை பெனிலோப் குரூஸ்க்கு முதலிடம் கிடைந்தது. பத்திரிகைகளில் எதிர்பாராத, ஏதாவது ஒருவிதத்தில் சிறந்த, வித்தியாசமான கோணங்களில் படங்கள் வெளியானவர்கள் முதல் 10 இடங்களை பிடித்தனர்.

மேக்கப் இல்லாமலே மிகவும் அழகான தோற்றம், இயற்கை அழகு கொண்டவர் பெனிலோப். எப்போதும் ஒளி வீசும் முகம் கொண்டவர். ஆஸ்கார் விருது பெறுவதற்கு தகுதியானவர். 16வது வயதில் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு, 20 ஆண்டுகளுக்கு பின்புதான் அழகான பெண் மற்றும் சிறந்த நடிகை என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆங்கிலத்தில் அழகுக்கு ‘பிரெட்டி’, ‘ப்யூட்டிபுல்’ என்ற 2 வார்த்தைகள் உள்ளன. அதில் ‘பிரெட்டி’ என்பது தற்காலிக அழகு, ‘ப்யூட்டிபுல்’ என்பது நிரந்தர அழகு என்பது என்று ஒரு மேதை தெரிவித்துள்ளார். பெனிலோப் குரூஸ் 2வது வார்த்தைக்குச் சொந்தமானவர் என்று ஆலன் கூறியுள்ளார்.

ஏழாம் அறிவு – சூர்யா நடிப்பில் முருகதாஸின் புதிய திரைப்படம்..!

ஏழாம் அறிவு – சூர்யா நடிப்பில் முருகதாஸின் புதிய திரைப்படம்..!


சூர்யா - ஸ்ருதிஹாஸன் நடிக்க, முருகதாஸ் இயக்கும் புதிய படத்துக்கு “ஏழாம் அறிவு” என தலைப்பிடப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிறது.

இந்தப் படத்தின் அறிமுக விழா நேற்று சனிக்கிழமை சென்னை கிரீன் பார்க்கில் நடந்தது.

விழாவில் பங்கேற்ற இயக்குநர் முருகதாஸ் கூறுகையில், "நான் கடைசியாக தமிழில் செய்த படம் ‘கஜினி’. அதே டீம் இப்போது இணைந்துள்ளது. நானும் சூர்யாவும் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்கிறோம்.

இந்தப்படம் குறித்து தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினிடம் விவாதித்த போது அவர் ‘கஜினிக்குப் பிறகு மீண்டும் அதே டீம் சேர்கிறது. எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்குமே என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்றார். ஒரு கணம் திகைத்துவிட்டேன்.

இந்த எதிர்பார்ப்பை ஈடுகட்டும் விதத்தில் திரைக்கதையை உருவாக்க 10 மாதங்கள் வேறு சிந்தனை நினைப்பு எதுவும் இன்றி உழைத்தேன்.

இந்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படம், உலக சினிமாவுடன் போட்டி போடும் அளவுக்கு இருக்கும். அதே நேரம், இதுவரை யாரும் யோசிக்காத ஒரு புதிய விஷயத்தை இந்தப் படத்தின் கருவாக வைத்திருக்கிறோம். நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கும் வெளிநாட்டுப் படைப்பாளிகள், அட இந்த விஷயத்தை நாம் யோசிக்கவில்லையே என்று வாய்விட்டுச் சொல்வார்கள். அந்த அளவு வித்தியாசமாக முயற்சித்துள்ளோம். இன்னொரு விஷயம், இதே சூர்யா- ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் இந்திப் படம் செய்யவும் ஆர்வமாக உள்ளேன்.." என்றார் முருகதாஸ்.

வழக்கமாக இரண்டு வரிகள் பேசவே யோசிக்கும் முருகதாஸ் இந்த நிகழ்வில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசியது குறிப்பிடத்தக்கது.

சூர்யா பேசுகையில், "அடுத்த பத்தாண்டுகளுக்கு பேசப்படும் படமாக இந்த ஏழாம் அறிவு அமையும். நான் இந்த அளவு வளரக் காரணம் நிச்சயம் பத்திரிகைகள்தான். அவர்களின் விமர்சனங்கள்தான் என்னை திருத்திக் கொண்டு, இந்த நிலைக்கு உயர உதவின” என்றார்.

விழாவில் நாயகி ஸ்ருதி, எடிட்டர் ஆண்டனி ஆகியோரும் பேசினர்.

நிகழ்ச்சியை கவிதை நடையில் தொகுத்து வழங்கி அசத்தினார் மக்கள் தொடர்பாளர் நிகில்.

“என்னை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்ற வடிவேலுவின் ஆசையை நிறைவேற்றி விட்டேன்..!” – சிங்கமுத்து கோர்ட்டில் தமாஷ்..!

“என்னை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்ற வடிவேலுவின் ஆசையை நிறைவேற்றி விட்டேன்..!” – சிங்கமுத்து கோர்ட்டில் தமாஷ்..!


என்னை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்ற வடிவேலுவின் ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்று நிருபர்களிடம் நடிகர் சிங்கமுத்து தமாஷாக கூறினார்.

நடிகர் சிங்கமுத்துவை போலீசார் கைது செய்து, நேற்று மாலை சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வேனில் ஏற்றிக்கொண்டு வந்தனர். மாஜிஸ்திரேட்டு வருகைக்காக சிறிது நேரம் கோர்ட்டு வளாகத்தில் சிங்கமுத்து வேனில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் போலீசாரிடம், “நான் சர்க்கரை நோயாளி, எனக்கு சில மாத்திரைகள் வேண்டும்” என்று கேட்டார். உடனே போலீசார் அந்த மாத்திரைகளை வாங்கி கொண்டு வந்து கொடுத்தனர்.

போலீஸ் வளையத்தையும் மீறி பத்திரிகை நிருபர்கள் சிலர் சிங்கமுத்துவிடம் பேட்டி கண்டனர். அப்போது சிங்கமுத்து சிரித்துக்கொண்டே, “என்னை ஜெயிலுக்கு அனுப்ப அவர் (வடிவேலு) ஆசைப்பட்டார். அவருடைய ஆசையை நிறைவேற்றி விட்டேன்..” என்று ஜோக் அடித்தார்.

“எந்தத் தவறும் செய்யாமல் தண்டனை பெறுபவர்கள், கடவுளின் ஆதரவை பெற்றவர்கள் ஆகிறார்கள். அந்த வகையில் நான் இப்போது கொடுத்து வைத்துள்ளேன். கடவுள் வடிவேலுக்கு தண்டனை கொடுப்பார். செல்வாக்கு உள்ள ஒருவர் பொய் புகார் கொடுத்து யாரையும் ஜெயிலுக்கு அனுப்பலாம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாகும்..” என்றும் சிங்கமுத்து கூறினார்.

“எத்தனை நாளைக்கு அவர் (வடிவேலு) இப்படி ஆட்டம் போடுவார் என்றும் பார்ப்போம். நான் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு இப்போது எந்த குறையும் இல்லை, ஜெயிலுக்கு போய் விட்டு வருகிறேன்” என்று சிரித்துக் கொண்டே சிங்கமுத்து நிருபர்களிடம் விடைபெற்றார்.

அவரது வக்கீல் அறிவழகன் நிருபர்களிடம் பேசும்போது, “அரசியல் செல்வாக்கின் பின்னணியில் இந்த பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதை சட்டப்படி சந்திப்போம். இதில் மனித உரிமை மீறல் உள்ளது. ஜனநாயகத்துக்கு விரோதமாக பொய் வழக்கு போடப்பட்டு சிங்கமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

ஆனால் சிங்கமுத்து கைது பற்றி கருத்து சொன்ன வடிவேலுவோ, "சட்டம், தன் கடமையை செய்திருக்கிறது`` என்றார்.

“என்னை சிங்கமுத்து ஏமாற்றி மோசடி செய்த வழக்கு பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து அவர்களின் கடமையை இப்போது செய்திருக்கிறார்கள். காவல்துறைக்கு நன்றி.” என்றார் வடிவேலு.

நடிகையுடன் தொடர்பு: நடிகர் கைது

Sunday, May 16, 2010

நடிகையுடன் தொடர்பு: நடிகர் கைது


பெங்களூரில் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகரானவர் ஆனந்த். இவர் முதன் முதலில் மனசுகள மாத்து மதுரா என்ற கன்னடப்படத்தில் அறிமுகமானார். தற்போது நான்னிதிய ஹாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ரம்யா பர்னா என்ற நடிகை நடித்து வருகிறார்.

ஒரு வருடத்துக்கு முன் ஆனந்துக்கு திருமணம் ஆனது. மனைவி பெயர் பரணி. ஆனந்த் 2-வதாக நடித்து வரும் படம் நிதி நெருக்கடியால் பாதியில் நிற்கிறது. அதற்கு பணம் கேட்டு நடிகர் ஆனந்த் மனைவியை சித்ரவதை செய்வதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி பெங்களூர் தியாகராய நகர் போலீசில் பரணி அளித்துள்ள புகாரில்,

’’எனக்கும் ஆனந்த்துக்கும் 1 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஆனந்த் தனது படம் பாதியில் நிற்கிறது. எனவே உன் நகைகளை விற்று ரூ.50 லட்சம் கொடு என்று கேட்டார். நான் மறுத்ததால் என்னை அடித்து உதைத்தார்.

மேலும் என் பெற்றோரிடம் வரதட்சணை வாங்கி வருமாறும் கொடுமைப்படுத்துகிறார். அவருக்கு நடிகை ரம்யா பர்னாவுடன் தொடர்பு இருக்கிறது. அவருக்கு செலவு செய்யத்தான் என்னிடம் பணம் கேட்கிறார். நான் தர மறுத்ததால் என்னை அடித்து துன்புறுத்துகிறார்’’என்று கூறியுள்ளார்.


இந்த புகாரை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி நடிகர் ஆனந்த்தை கைது செய்தனர்.