புது மாப்பிள்ளையாகிறார் பிரகாஷ்ராஜ்..!
நடிகர் பிரகாஷ்ராஜ் வருகின்ற ஜூன் 24-ம் தேதி மீண்டும் மாப்பிள்ளைக் கோலத்தில் திளைக்கப் போவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று நான்கு மொழிகளிலும் படு பிஸியான நடிகராக இருந்து வரும் பிரகாஷ்ராஜ் பிரபல தமிழ் நடிகையான லலிதகுமாரியை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்..
இந்த நிலையில் பாலிவுட்டில் டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி வரும் போனி வர்மா என்பவருடன் காதல் வயப்பட்ட பிரகாஷ்ராஜ் அவரைத் திருமணம் செய்வதற்காக தனது மனைவி லலிதகுமாரியை சமீபத்தில்தான் டைவர்ஸ் செய்தார்.
அடுத்ததென்ன? கல்யாணம்தானே என்ற கேள்விக்கு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு தான் கன்னடத்தில் தற்போது இயக்கி வரும் அபியும் நானும் படத்தை முடித்துவிட்டுத்தான் மறுவேலை என்றார் பிரகாஷ்ராஜ்.
தற்போது அந்தப் படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வரும் சூழலில் நேற்று பெங்களூரில் பத்திரிகையாளர்களுக்காக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
இந்தக் காட்சிக்கு தன்னுடைய காதலி போனி வர்மாவுடன் வந்து பத்திரிகையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
நெருங்கி விசாரித்த பத்திரிகையாளர்களிடம் தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவது உறுதிதான் என்றிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
அநேகமாக வருகின்ற ஜூன் 24-ம் தேதியன்று பிரகாஷ்ராஜ்-போனி வர்மாவின் திருமணம் நடைபெறும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
போனி வர்மாவும் ஏற்கெனவே திருமணமானவர்தான். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரிடமிருந்து பிரிந்து வாழ்கிறாராம்..!
புது மாப்பிள்ளையாகிறார் பிரகாஷ்ராஜ்..!
Tuesday, May 18, 2010
Posted by
3rdeye
at
4:00 AM
Labels:
Cinema
0
comments
“அடுத்து இரண்டு படங்களை இயக்கி கருணாநிதியின் கையால் விருது பெற வேண்டும்” – பாரதிராஜாவின் ஆசை
Monday, May 17, 2010
Posted by
3rdeye
at
2:48 AM
“அடுத்து இரண்டு படங்களை இயக்கி கருணாநிதியின் கையால் விருது பெற வேண்டும்” – பாரதிராஜாவின் ஆசை
என் 35 ஆண்டுகால உழைப்பில் கிடைக்காத பெயரும், புகழும் 2 ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருக்கும் இந்த தொடரில் கிடைத்திருக்கிறது.
நான் மூன்று முதல்வர்களிடம் பழகியிருக்கிறேன். நான் கலைஞரைப் பார்க்கும்போது அவரது நாற்காலியை பார்க்கமாட்டேன். அவர் முகத்தை, அனுபவத்தை, ஆற்றலை மட்டுமே பார்ப்பேன். கலைஞரிடம் முட்டி மோதிய காலகட்டத்தில் கூட, `நீ என்ன வேணும்னாலும் பண்ணு. என்னில் இருக்கும் உன்னை எடுக்க முடியாது` என்கிற மாதிரியே நடந்துகொண்டார். இப்படியொரு மனம் அவருக்கு மட்டும்தான் உண்டு.
அவர் என் பிள்ளைகள் திருமணத்தையும் நடத்திக் கொடுத்தவர். எனக்கு அப்பன் இல்லை. அப்பனாக இருந்து என் பிள்ளைகள் திருமணத்தை நடத்தி தந்து என்னை பெருமைப்படுத்தியவர்.
என் கலை வாழ்வில் ஒரு பதிவு வேண்டும் என்பதற்காகவே இந்த விழாவில் நீங்கள் வாழ்த்த வேண்டும் என்று அழைத்தேன். உங்கள் வாழ்த்து கிடைத்ததை என் பிள்ளைகளின் பிள்ளைகளும் அவர்கள் தலைமுறை வரைக்கும் பேசிக்கொண்டிருப்பார்கள்.
நான் அடுத்து ‘தென் கிழக்கு சீமையிலே’, ‘குற்றப் பரம்பரை’ என 2 படங்களை இயக்கவிருக்கிறேன். இந்த 2 படங்களும் வெளியாகி இரண்டுக்கும் உங்களிடம் விருது வாங்கவேண்டும். இதுவே என் இப்போதைய ஆசை.
இவ்வாறு பாரதிராஜா பேசினார்.
Labels:
Cinema
0
comments
Subscribe to:
Posts (Atom)